Thursday, January 26, 2012

24 மனை தெலுங்குச்செட்டியார் வரலாறு

தமிழ் நாட்டில் வணிகர் தலைவர்களின் வணிக சேவையை மெச்சும் வண்ணம் சோழ, பாண்டிய அரசர்கள் அளித்த பட்டம் எட்டி என்பது.

"எட்டி குமரன் இருந்தோன் தன்னை" (மணிமே.4.58).

எட்டுதல் - உயர்தல். எட்டம் - உயரம். மரூஉப்புணர்ச்சி. எட்டி - செட்டி.

இன்றும் பல்வேறு வாணிக வகுப்பார், செட்டிஎன்பதைப் பட்டமாக மட்டுமன்றி குலப்பெயராகவுங் கொண்டுள்ளனர். அவர்களில் 24 மனை தெலுங்கு செட்டியார் இனமும் ஒன்று. தெலுங்கு பேசும் 24 மனை தெலுங்கு செட்டியார்கள் ஆந்திராவிலிருந்து 14 மற்றும் 15 ஆம் நூற்றாண்டின் மத்தியில் தமிழ்நாட்டிற்குக் குடி பெயர்ந்தனர்.
 
வடுகர்

வளஞ்சியர் என்ற வாணிகக் குழுவினைப்பற்றி முதலாம் இராசேந்திர சோழன் காலத்திய காட்டூர்க் கல்வெட்டு ஒன்று விரிவான செய்திகளைக்கூறுகின்றது. இவர்கள் குழுவில் செட்டிகள், செட்டிப் பிள்ளைகள் ... ஆகியவர்களும் சேர்ந்திருந்தனர். தனம் வடுகர் என்போரின் மூதாதையரே வளஞ்சியர் என்று மற்றொரு சோழர் கல்வெட்டிலிருந்து  அறியலாம். சங்ககாலத்தில் வடுகர் இன மக்கள் வேங்கடமலைக்கு வடக்கில் வாழ்ந்துவந்தனர். “வடுகர்” என்றாலே வடக்கிலிருந்து வந்தவர்கள் என்று பொருள்.

"கடுங்குரற் பம்பைக் கதநாய் வடுகர்" (நற். 212 : 5),

வணிகர்கள் (சாத்தர்கள்)

வணிகப் பொருள்கள் சாத்து எனப்படும். வணிகப் பொருள்களை வண்டிகளிலும், பொதி எருதுகளின் மீதும் ஏற்றிச் சென்றுள்ளனர். அவைகளின் மூட்டைகள் பொதி என்றும், பாக்கம் என்றும் அழைக்கப்பட்டன. அதனால் வணிகர்கள் சாத்தர் எனப்பட்டனர்.  வணிகர்கள் ஓர் ஊருக்குப் பொருள்களைக் கொண்டு சென்று விற்பதுடன், அங்கு கிடைக்கும் பொருள்களைத் தம் ஊர்க்கும் வாங்கி வந்தனர். எனவே அவர்கள் இருவழி வணிகமும் செய்தனர்.  "சாது செட்டி" என்ற பெயர் கூட "சாத்து" என்ற சொல்லையொட்டி தோன்றியிருக்கலாம். 

வணிக குழுக்கள் (Merchants Guild)

பண்டைய சோழ நாட்டில் பெரும் வணிக குழுக்கள் இருந்தன. இந்த வணிகர்கள் சாத்து (கூட்டம்)  பெரும் செல்வாக்குடன் திகழ்ந்தது. செட்டியார்கள் அனைவரும் முதலில்(சிலப்பதிகாரக் காலத்தில்) தனவணிகர் என்றே அழைக்கப் பட்டனர். இவர்களே புதிய அரசனின் சிரசில் மணிமுடியைச் சூடும் தனிமதிப்பைக் கொண்டிருந்தனர். காலப்போக்கில் வணிகர் மரபில் பெண்கள் குறைந்த போது வெள்ளாளர்களில் பெண் எடுத்தனர்.
கல்வெட்டுகளில் பல்வேறு வணிகக் குழுவினர் பெயர்கள் காணப்படுகின்றன. நானாதேசி, திசையாயிரத்து ஐநூற்றுவர், மணிக்கிராமத்தார், ஆயிரவர், பன்னிரண்டார், இருபத்துநான்கு மனையார், நகரத்தார், வளஞ்சியர், அஞ்சு வண்ணம், சித்திரமேழிப் பெரியநாடு என அவர்கள் பெயர்கள் குறிக்கப்பட்டுள்ளன.

வணிக பெருவழிகள்

வணிக மையங்களை இணைப்பவை பெருவழிகள் (trunk roads). திருவிடந்தை குறித்த கல்வெட்டில், "வடுகப் பெருவழி' எனும் பெயர் வந்துள்ளது. ஏழாம் நூற்றாண்டைச் சேர்ந்த  கல்வெட்டில் வணிகர் குழுவினர் நிர்வாகித்து வந்த காவல் வீரர்களைப் பற்றிய குறிப்பு வருகிறது. சோழ சக்ரவர்த்தி முதற் குலோத்துங்க சோழன் (1070-1120) காலத்தில் வணிகர்கள் படைவீரர்களையும், தளபதிகளையும் தங்களுடைய காவற்படையினராக அமர்த்தி ஊதியம் வழங்கி  பராமரித்தார்கள். இது போன்ற பாதுகாப்பு அளிக்க அரசு சுங்க வரி கூட வசூலித்ததாம்4. வணிகப் பெருவழிகளான  காரைக்கால் பெருவழி, தஞ்சாவூர் பெருவழி, கொங்கர் பெருவழி, பெண்ணாற்றுப் பெருவழி (இது தென்பெண்ணை ஆற்றை ஒட்டி, தகடூரில் இருந்து திருக்கோவிலூர் வரை இருந்திருக்கிறது.), இராசகேசரிப் பெருவழி (இது கொங்கு நாட்டில் இருந்து சேரநாட்டுக்குச் செல்லும் பாலக்காட்டுக் கணவாயை ஒட்டியது). மகதேசன் பெருவழி (சேலம் மாவட்டம் ஆறுகழூரில் இருந்து காஞ்சிபுரம் வரை சென்றது.) போன்ற பெருவழிப்பாதைகளில் எரி வீரர் படை வணிகர்களுக்கு பாதுகாப்பளித்தது.

விஜயநகரப் பேரரசு

பதிமூன்றாம் நூற்றாண்டில் நிகழ்ந்த மாலிக் காபூரின் படையெடுப்பு தென்னகத்தின் வலிமை வாய்ந்த சேர, சோழ, பாண்டிய பேரரசுகளை எல்லாம் அழித்து தென்னிந்தியாவை, குறிப்பாக தமிழகத்தையே சீர்குலைத்து நிலைகுளையச் செய்ததது. வழிபாட்டுத் தளங்கள் எல்லாம் கொள்ளையடிக்கப்பட்டன. இடிபாடுகளும் சுடுகாடுகளும் மட்டும் மிஞ்சியது. மீண்டது. மாலிக் காபூர் விட்டுச்சென்ற தளபதிகள் சிற்றரசர்களாக மாறி கொள்ளையடித்தலையே ஆட்சியாகச் செய்துவந்தனர்.  பதினான்காம் நூற்றாண்டில் முகலாய படையெடுப்பு மற்றும் தில்லி சுல்தான்களின் காட்டாட்சி  இந்துக்களிடையே ஒற்றுமையை  ஏற்படுத்தியது. இதன் காரணமாக இந்துக்கள் ஒன்றாக இணைந்து விஜயநகரப் பேரரசு என்ற புதிய பேரரசை உருவாக்கினர். ஏற்பட்டது. பதினான்காம் நூற்றாண்டில் வலிவிழந்த சேர, சோழ, பாண்டிய  பேரரசுகளின் வீழ்ச்சி காரணமாக, தமிழ்நாடு விஜயநகரப் பேரரசின் ஒரு அங்கமாக மாறியது.

இதனை தொடர்ந்து இந்தியாவின் மற்ற பகுதிகளில் ஏற்பட்ட அரசியல் மாற்றங்கள் தமிழ்நாட்டின் வரலாற்றில் குறிப்பிடத்தக்க மாற்றத்தைத் தோற்றுவித்தன.  பல படையெடுப்புகளுக்குப்  பின்பு விஜயநகரப் பேரரசு தம் ஆட்சியை தென்னிந்தியா முழுவதும் கைப்பற்றி விரிவு படுத்தியது. தமிழகப் பகுதிகளை வேலூர், சந்திரகிரி, தஞ்சை, மதுரை திருவதிகை (செஞ்சி), என ஐந்து மண்டலங்களாகப் பகுக்கப்பட்டு ஒவ்வொன்றுக்கும் ஒருமண்டலேசுவரரை நியமித்தனர்.

மகாமண்டலேசுவரருக்குக் கீழ்ப்பட்டிருந்த இராஜ்யங்கள் எனப்பட்ட பிரிவுகளுக்கு நாயக்கர் என்ற பதவியில் உள்ளூர் ஆளுநர்களை நியமித்து பேரரசின் பல்வேறு பகுதிகளை ஆட்சிச் செய்யுமாறு விஜயநகரப் பேரரசு ஏற்பாடு செய்தது.

கம்பளதார், நாயக்கர்

விஜயநகரப் பேரரசில் நாட்டை அல்லது பாளையத்தை (குறுநிலத்தை) நிர்வாகித்தவர்கள்  நாயக்கர் என்று அழைக்கப்பட்டனர். நாயக்கர் என்பது ஒரு பட்டமாகும். கம்பளதார்களின் உதவியால் தான் தமிழகத்தில் நாயக்கர் ஆட்சி வந்தது. அதனால் தான் பெரும்பாலான பாளையம் இவர்களால் ஆளப்பட்டுள்ளது. கம்பளத்தார்கள் இல்லை என்றால் தமிழ் நாட்டில் இத்துணை காலம் விஜயநகர பேரரசு, நாயக்கர் ஆட்சி அமைந்து இருக்காது.

காப்பு, பலிஜா, கவரை, கம்மா இனத்தவர்கள்

ஆந்திர மாநிலத்தின் வரண்ட பாறைகள் சூழ்ந்த ராயலசீமா என்ற நிலப்பகுதியில் ஆடு மாடு மேய்த்து வாழ்ந்தவர்களே இந்தக்  கம்பளத்தார்கள். கம்பளத்தார் என்பது ஒரு இடப்பெயர். இவர்கள் ஆந்திராவில் மிக பெரிய சமுதாயமான காப்பு (சாதி) இனத்தவர்களின் கிளை சாதியினராக கருதபடுகிறார்கள். பேரரசர் கிருஷ்ணதேவராயர் இந்த காப்பு இனத்தை சேர்ந்தவரே. காப்பு என்ற இனத்திலிருந்து கிளைவிட்டது தான் பலிஜா இனம். பலிஜா இனத்திலிருந்து கொல்லவார், தொக்லவார், கம்மா மற்றும் கவரை இனங்கள் கிளைத்தன. பலிஜா இனத்தவர்கள் நாய்டு மற்றும் செட்டி என்ற பட்டங்களைப் பெற்றனர்.

செட்டி பலிஜா

பலிஜா இனத்திலிருந்து செட்டி பலிஜா என்னும் வணிகர்களும், நாயுடு பலிஜா படைத்தலைவர்களும்  தோன்றினர். செட்டி பலிஜாக்கள் செல்வாக்கு மிகுந்த தனவணிகர்களாக உருவெடுத்தனர். இவர்கள் “தேசாதிபதி“ என்றும் பெயர் பெற்றனர். விஜயநகரப் பேரரசு தமிழ்ப் பகுதிகளில் வேர்விட்டு நிலைபெற்ற இவ்விரு நூற்றாண்டுகளிலேயே பெரும் எண்ணிக்கையில் தெலுங்கு பேசும் பல இனத்தை சேர்ந்த மக்கள் தமிழ்நாட்டுக்கு இடம் பெயர்ந்தனர். புலம் பெயர்ந்த செட்டி பலிஜாக்கள் கொங்கு நாட்டில் வணிகம் செய்து வந்தனர். தகுந்த ஆதாரங்கள் கிடைக்காத நிலையில்,  செட்டி பலிஜாக்கள்  இனத்திலிருந்து தான் 24 மனை தெலுங்கு செட்டியார்கள் தோன்றி இருக்கலாம் என்று நம்பப்படுகிறது. 

 பலிஜா இனத்திலிருந்து செட்டி பலிஜா என்னும் வணிகர்களும், நாயுடு பலிஜா என்னும் படைத்தலைவர்களும் தோன்றினர். செட்டி பலிஜாக்கள் செல்வாக்கு மிகுந்த தனவணிகர்களாக உருவெடுத்தனர். இவர்கள் “தேசாதிபதி“ என்றும் பெயர் பெற்றனர். விஜயநகரப் பேரரசு தமிழ்ப் பகுதிகளில் வேர்விட்டு நிலைபெற்ற இவ்விரு நூற்றாண்டுகளிலேயே பெரும் எண்ணிக்கையில் [[தெலுங்கு]] பேசும் பல இனத்தை சேர்ந்த [[திராவிடர்|திராவிட]] மக்கள் தமிழ்நாட்டுக்கு (மதுரை, தஞ்சாவூர்,செஞ்சி போன்ற பகுதிகளுக்கு) இடம் பெயர்ந்தனர். புலம் பெயர்ந்த செட்டி பலிஜாக்கள் கொங்கு நாட்டில் வணிகம் செய்து வந்தனர். தகுந்த ஆதாரங்கள் கிடைக்காத நிலையில், செட்டி பலிஜாக்கள் இனத்திலிருந்து தான் 24 மனை தெலுங்கு செட்டியார்கள் தோன்றி இருக்கலாம் என்று நம்பப்படுகிறது.
     
இவர்கள் வீட்டில் தெலுங்கு மொழியில் பேசினாலும், தமிழ்ப் பண்பாட்டில் 24 மனை தெலுங்குச் செட்டியார்களின் வாழ்வியல் முறையும், கலாச்சாரமும் பிரிக்க முடியாத ஒன்றாகி விட்டது. இவர்கள் தங்கள் குல தெய்வமாக காமாட்சி அம்மனை வழிபடுகிறார்கள். ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி முதல் ஞாயிறு அன்று காஞ்சியில் இச்சமூகத்தின் சார்பில் ஆராதனை விழா நடத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. தமிழ்நாடு முழுக்க இச்சமூகத்தினர் பரவி இருக்கிறார்கள் என்றாலும் மதுரை, தேனி, திருச்சி, கோயம்புத்தூர், திருநெல்வேலி, இராமநாதபுரம் மற்றும் சென்னை பகுதிகளில் குறிப்பிடத்தக்க அளவு உள்ளனர். இவர்கள் தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள தமிழ்நாடு சாதிகள் பட்டியல்|தமிழ்நாடு சாதிகள் பட்டியலில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் பட்டியலில் சேர்க்கப்பட்டிருக்கின்றனர்


திருமண உறவுமுறை மற்றும் குலதெய்வ வழிபாடு

24 மனை தெலுங்குச் செட்டியார்களில் 24 மனை என்பது 24 கோத்திரத்தைக் குறிப்பிடுகிறது. சிலர் வீடு என்றும் குறிப்பிடுவார்கள். இதில் 16 (பதினாறு) கோத்திரங்கள் ஆண் வீடு என்றும் 8 (எட்டு) கோத்திரங்கள் பெண் வீடு என்றும் வகைப்படுத்தபட்டுள்ளன.


24 மனை தெலுங்கு செட்டியார் மனை அல்லது வீடு (கோத்திரங்கள்)

'16 பதினாறு வீடு (ஆண் வீடு)

மனை (குலம்) கோத்திரம்     குல ரிஷி

  1. மும்முடியார்     ஸ்ரீ முகுந்த ரிஷி
  2. கோலவர் (கோலையர்)     ஸ்ரீ குடிலஹு ரிஷி
  3. கணித்தியவர்     ஸ்ரீ கௌதன்ய ரிஷி
  4. தில்லையவர்     தொந்துவ ரிஷி
  5. பலிவிரியர் (பலுவிதியர்)     ஸ்ரீ ஸௌலய ரிஷி
  6. சென்னையவர்     ஸ்ரீ ஹரிகுல ரிஷி
  7. மாதளையவர்     ஸ்ரீ குந்தள ரிஷி
  8. கோதவங்கவர்     ஸ்ரீ கணத்த ரிஷி
  9. ராஜபைரவர்     ஸ்ரீ ரோசன ரிஷி
  10. வம்மையர்     ஸ்ரீ நகுல ரிஷி
  11. கப்பவர்     ஸ்ரீ சாந்தவ ரிஷி
  12. தரிசியவர்     ஸ்ரீ தர்ஷிய ரிஷி
  13. வாஜ்யவர்     ஸ்ரீ வசவ ரிஷி
  14. கெந்தியவர்     ஸ்ரீ அனுசுயி ரிஷி
  15. நலிவிரியவர்     ஸ்ரீ மதஹனு ரிஷி
  16. சுரையவர்     ஸ்ரீ கரஹம ரிஷி

'8 எட்டு வீடு (பெண் வீடு)

மனை (குலம்) கோத்திரம்     குல ரிஷி
  1. மக்கடையர்     ஸ்ரீ மங்கள ரிஷி
  2. கொரகையர்     ஸ்ரீ கௌதம ரிஷி
  3. மாரெட்டையர்     ஸ்ரீ மண்டல ரிஷி
  4. ரெட்டையர்     கௌஷிக ரிஷி
  5. பில்லிவங்கவர்     ஸ்ரீ பில்லி ரிஷி
  6. தவளையார்     ஸ்ரீ கௌந்தைய ரிஷி
  7. சொப்பியர்     ஸ்ரீ சோமகுல ரிஷி
  8. லொட்டையவர்     ஸ்ரீ பார்த்துவ ரிஷி 
 திருமண உறவு

இந்த சமூகத்தினர் 16 வீடு மற்றும் 8 வீடு ஆகிய இந்த இரு பிரிவுகளுக்கிடையே திருமண உறவு வைத்துக் கொள்கிறார்கள். ஆனால் 16 (ஆண்) வீட்டைச்சேர்ந்த கோத்திரப் பிரிவினர் தங்களுக்குள் திருமண உறவு வைத்துக் கொள்வதில்லை. அது போல 8 (பெண்) வீட்டைச்சேர்ந்த பிரிவினரும் தங்களுக்குள் திருமண உறவு வைத்துக் கொள்வதில்லை. இதன் காரணம் ஒரே பிரிவில் இருப்பவர்கள் சகோதர உறவாக கருதப்படுவதே ஆகும்.

இச்சமூகத்தின் தலைவர் பெரியதனத்தார், நாட்டாமை, செட்டுமை அல்லது சாதித் தலைவர் என்று அழைக்கப்படுகின்றனர். பல கிராமங்களில் இவர்கள் தலைமையில் இச்சாதியினரின் திருமணங்கள் நடைபெறுவது வழக்கம். நகர்ப்புறங்களில் அவ்வழக்கம் கிடையாது.

குலதெய்வ வழிபாடு

24 மனை தெலுங்குச் செட்டியார்களின் குலதெய்வ வழிபாடு கூட அவரவர் கோத்திர அடிப்படையிலேயே அமைந்துள்ளது. ஒவ்வொரு கோத்திரத்தாரும் தங்களுக்குள் ஒரு தெய்வத்தை குலதெய்வமாக ஏற்றுக்கொண்டு, அத்தெய்வத்துக்கு சொந்தமாக ஒரு கோவிலையும் அமைத்துக் கொண்டுள்ளார்கள். பெருங்கோவில்களுக்கும் குலதெய்வ கோவில்களுக்கும் உள்ள முக்கிய வித்தியாசம் என்னவென்றால், இம்மாதிரி குலதெய்வ கோவில்கள் குறிப்பிட்ட பங்காளிகள் அல்லது குடும்பங்களின் பராமரிப்பில் அவர்களுக்காகவே நிர்மாணிக்கப்பட்டு இயங்கும்.

 அங்காளிகள், பங்காளிகள்

ஒரு கோத்திரத்திற்கு உள்ளே அங்காளிகள், பங்காளிகள் என்று இரண்டு வகையினர் உண்டு. அங்காளிகள் என்றால் அங்கத்துடன் ஒட்டிப் பிறந்தவர்கள், அதாவது கூடப் பிறந்தவர்கள். பங்காளிகள் என்றால் சித்தப்பா பிள்ளைகள், பெரியப்பா பிள்ளைகள், ஒன்றுவிட்ட, இரண்டுவிட்ட என்பார்களே அவர்கள். இதுபோல, அங்காளிகளும், பங்காளிகளும் சேர்ந்து வழிபடுவதுதான் குல தெய்வ வழிபாடு.

ஸ்ரீ காமாட்சி அம்மன்

ஸ்ரீ காமாட்சி அம்மன் அனைத்து 24 மனை தெலுங்கு செட்டியார் கோத்திரத்தாராலும் ஒருமித்த குலதெய்வமாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. பண்டை காலத்தில் காஞ்சிபுரம் அருள்மிகு காமாட்சி அம்மன் ஆலயம் 24 மனை தெலுங்கு செட்டியார்ளால் பராமரிக்க பட்ட கோயிலாக இருந்ததற்கு சான்றாக காஞ்சிபுரம் செப்பு ஏடுகளில் செய்திகள் அறியப்படுகின்றனவாம். பிற்காலத்தில் இவர்கள் கோவில் பராமரிப்பு உரிமையை பிற பத்தர்களுக்காக விட்டு கொடுத்து, பிடிமண் எடுத்து வந்து, கரூர் அருகில் அமைந்துள்ள வேஞ்சமகூடல் என்னும் ஊரில் தனி காமாட்சி அம்மன் கோயில் கட்டியதாக வரலாறு! ஸ்ரீ காமாட்சி அம்மனை இன்றும் கூட வேஞ்சமாகூடலில் பக்தர்களுக்கு அருளாட்சி புரிகிறாள்.

 குலதெய்வங்கள்

 திருமால் (பெருமாள்), மகாலட்சுமி, கன்னிமார் மற்றும் அங்காள பரமேஸ்வரி அம்மன் போன்ற தெய்வங்கள் சில கோத்திரத்தவர்க்கு குலதெய்வங்கள் ஆகும். பெரும்பாலும் 24 மனை தெலுங்கு செட்டியார் கோத்திரங்களில் குல தெய்வம் என்பது கடவுளாக இல்லாமல் குடும்பத்தில் வாழ்ந்து மறைந்த முன்னோர்களாக கூட இருப்பார்கள்: உதாரணமாக குங்குமகாளியம்மன், சின்னம்மன், பாலாயி, பாப்பாயி, வீரமாத்தியம்மன் மற்றும் பல சிறு தெய்வங்கள்.

 மேல் நிலையாக்கல்

நாட்டு மரபைப் பின்பற்றும் இக்கோவில்களில் தற்போது தீவிரமாக வைதீகமயமாக்கல் நடந்து வருகின்றன. அதன் முறைகளைக் கீழ்க்கண்டவாறு பட்டியலிடலாம்.
1) ஆகம நெறிப்படி கோவிலைக் கட்டுதல்.

2) பலி, சாமியாட்டம், சடங்குகள் போன்ற கூறுகளுடைய நாட்டு வழக்குகள் நிறுத்தப்படல்

3) வழிபாடு, விழாக்களில் வைதீக முறை பின்பற்றப்படல்; வட மொழி மந்திரம் ஓதப்படல்

4) துணைத் தெய்வங்களாக நவக்கிரகங்கள், விநாயகர், சுப்பிரமணியர் போன்ற பெருநெறித் தெய்வ உருவங்களை ஆகம முறைப்படி நிறுவுதல்; கருவறைத் தெய்வ உருவத்தைப் பெருநெறித் தெய்வமாக்கல்

5) கோவில் தொடர்பான பிரயோகங்கள் கூட வைதீக மரபில் கூறப்படல் (அபிஷேகம், நைவேத்தியம், கும்பாபிஷேகம், ஸ்ரீபலி, உற்சவ விக்ரகம், கர்ப்பக் கிரகம் முதலியன)

6) கோவிலின் பூசை செய்பவரைப் பிராமணராக நியமித்தல்

7) கோவிலின் முக்கிய தெய்வத்தின் பழைய கதை மறைக்கப்பட்டு, புராணங்களுடன் தெய்வம் தொடர்பான வரலாறு இணைக்கப்படல்

8) சமயப் பிரச்சாரக் கூட்டங்கள், பட்டி மன்றம், வழக்காடு மன்றம், கருநாடக இசைக் கச்சேரி நடத்தல்

9) பெண்களை ஒரே இடத்தில் கூட்டுவதற்குரிய திருவிளக்கு பூசை முதலியவற்றை நடத்தல்

10) முக்கிய தெய்வத்தை கர்மா, மாயா போன்ற தத்துவார்த்தங்களுடன் இணைத்துப் பேசுதல்.

மேற்கோள்கள்

1. சோழர் காலத்தில் தமிழரின் சமுதாயம் http://www.tamilvu.org/slet/lA100/lA100pd1.jsp?bookid=224&pno=327
2. சோழர் காலத்தில் தமிழரின் சமுதாயம் http://www.tamilvu.org/slet/lA100/lA100pd1.jsp?bookid=224&pno=325
3. வணிகக்குழு http://www.tamilvu.org/courses/degree/c031/c0314/html/c0314664.htm
4. முதற் குலோத்துங்க சோழன் சுங்கம் தவிர்த்தது ஏன்? http://www.sishri.org/sungam.html

37 comments:

  1. New Matrimonial Portal for 24 manai telugu chettiar which is free specifically for our community

    http://www.24manaiteluguchettiar.in

    ReplyDelete
  2. Thank you for the informations.Pls provide the kuladevatha names and temples of each gothra in English

    ReplyDelete
  3. Replies
    1. செட்டியார் என்பது ஒரு வணிகப்பட்டம் ஆகும். செட்டி என்பது இனம் கிடையாது. எட்டி என்பதன் மாற்று புணர்ச்சியே செட்டி என்பது. எட்டி(எட்ட உள்ள ஒரு பொருளை கிட்ட கொண்டு வந்து கொடுப்பவன்) இதுவே பின் நாளில் செட்டியார் என்றானது. 24மனை தெலுங்கு செட்டியார் இனம் தெலுங்கை தாய் மொழியாக கொண்ட இனம். போரையும் வணிகத்தையும் குலத் தொழிலாக கொண்ட இனம். இவர்கள் ஆதியில் பலிஜா இனத்தை சார்ந்தவர்கள்.இவர்களே செட்டி பலிஜாக்கள். செட்டி பலிஜாக்களே பலிஜாவின் முதல் கிளை என்று வரலாற்று ஆசிரியர்கள் கூறுகின்றனர். இவர்கள் பல பெயர்களில் வரலாற்றில் குறிப்படுகின்றனர். செஞ்சி நாயக்கர்கள் அனைவரும் செட்டிபலிஜாக்களே.மேலும் மாமன்னர் கிருஷ்ணதேவராயரும் பலிஜா இனத்தை சார்ந்தவரே.தமிழ்நாட்டைப் பொருத்தவரை 24 மனைதெலுங்கு செட்டிபலிஜாக்கள் பின்வருமாறு அழைக்கப்படுகிறார்கள் 24 மனை தெலுங்கு செட்டி, தெலுங்கு செட்டி, சாது செட்டி, தெலுங்கு பட்டி செட்டி, ஜனப்ப செட்டி, சலுப்பா செட்டி, மகாநட்டார் (கொடைகானல் மலை பகுதியில் நட்டார் என்றும் அழைக்கப்படுகிறது) , சாது குல தேசதிபதி தெலுங்கர் (1951 திருச்சி தஞ்சை சாதி பட்டியல்), யாக க்ஷத்ரிய செட்டியார் (1951 திருச்சி தஞ்சை சாதி பட்டியல்), தேசதிபதி தெலுங்கர்(1951 திருச்சி தஞ்சை சாதி பட்டியல்) என பல பெயர்களால் அறியப்படுகிறது. பண்ணைகாடு வனப்பகுதியில் உள்ளவர்கள் வாழைகாய்தெலுங்கர், என்றும், கிராமப்புறங்களில் உள்ள மதுரை, தேனி மற்றும் திண்டுக்கல் போன்ற பகுதிகளில் உள்ளவர்ளை உப்பு தெலுங்கர் என்றும் அழைக்கப்படுகிறார்கள்.

      Delete
    2. come on! 24 manai is tamil caste you are mixing with chetty balija naidus

      Delete
  4. சாது செட்டி குல தெய்வம் பற்றி கூறுங்கள்
    பதிவு அருமையாக இருந்தது வாழ்த்துக்கள்💐💐💐

    ReplyDelete
  5. 24 மனை தெலுங்குச் செட்டியார் வாழ்க்கைப்பயணச் சடங்குகள் M.phil ஆய்வேடு மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் உள்ளது

    ReplyDelete
  6. தகவலுக்கு நன்றி

    ReplyDelete
    Replies
    1. செட்டியார் என்பது ஒரு வணிகப்பட்டம் ஆகும். செட்டி என்பது இனம் கிடையாது. எட்டி என்பதன் மாற்று புணர்ச்சியே செட்டி என்பது. எட்டி(எட்ட உள்ள ஒரு பொருளை கிட்ட கொண்டு வந்து கொடுப்பவன்) இதுவே பின் நாளில் செட்டியார் என்றானது. 24மனை தெலுங்கு செட்டியார் இனம் தெலுங்கை தாய் மொழியாக கொண்ட இனம். போரையும் வணிகத்தையும் குலத் தொழிலாக கொண்ட இனம். இவர்கள் ஆதியில் பலிஜா இனத்தை சார்ந்தவர்கள்.இவர்களே செட்டி பலிஜாக்கள். செட்டி பலிஜாக்களே பலிஜாவின் முதல் கிளை என்று வரலாற்று ஆசிரியர்கள் கூறுகின்றனர். இவர்கள் பல பெயர்களில் வரலாற்றில் குறிப்படுகின்றனர். செஞ்சி நாயக்கர்கள் அனைவரும் செட்டிபலிஜாக்களே.மேலும் மாமன்னர் கிருஷ்ணதேவராயரும் பலிஜா இனத்தை சார்ந்தவரே.தமிழ்நாட்டைப் பொருத்தவரை 24 மனைதெலுங்கு செட்டிபலிஜாக்கள் பின்வருமாறு அழைக்கப்படுகிறார்கள் 24 மனை தெலுங்கு செட்டி, தெலுங்கு செட்டி, சாது செட்டி, தெலுங்கு பட்டி செட்டி, ஜனப்ப செட்டி, சலுப்பா செட்டி, மகாநட்டார் (கொடைகானல் மலை பகுதியில் நட்டார் என்றும் அழைக்கப்படுகிறது) , சாது குல தேசதிபதி தெலுங்கர் (1951 திருச்சி தஞ்சை சாதி பட்டியல்), யாக க்ஷத்ரிய செட்டியார் (1951 திருச்சி தஞ்சை சாதி பட்டியல்), தேசதிபதி தெலுங்கர்(1951 திருச்சி தஞ்சை சாதி பட்டியல்) என பல பெயர்களால் அறியப்படுகிறது. பண்ணைகாடு வனப்பகுதியில் உள்ளவர்கள் வாழைகாய்தெலுங்கர், என்றும், கிராமப்புறங்களில் உள்ள மதுரை, தேனி மற்றும் திண்டுக்கல் போன்ற பகுதிகளில் உள்ளவர்ளை உப்பு தெலுங்கர் என்றும் அழைக்கப்படுகிறார்கள்.

      Delete
    2. Bangara Rayulu is keep on mixing naidu caste with 24 manai mumudi chettiyaar and giving a mixed history... all facts you've given are right but chetty balija is differnt 24 manai chetty is differnt even TN caste gazatte also brings all chetty into one...due to this no one knows they are tamils and living in the motherland as immigrants.. many statrted to think the arya vysa komuti chetty also same as 24 manai... according to andra bhoja komuti chetty is the main trading group in teluguland.. no mentions about 24 manai .. even the caste mumudiyyaar is also not mention anywhere...sadhu chetty was mentioned as the people from chola country.. by speaking telugu we cant be telugu ... many think 24 manai telugu chetty as telugu orgion bcz of the title... it's a nothing more than a fate.... the royal neiboughrs of great cholas who always crowned the cholas as now living in their motherland as immigrants and titled as Telugu... all happenes bcz of vijayanagara..
      all the caste in tamilland are termed as shudras under vijayanagar time exept chettys/ettys of tamiland.. but they are termed/converted to telugu and volunteerly yes we accepted telugu as our mother tounge bcz mumudiyaar&co is in andra region,i.e nellur sorroundings at 1167 AD(approx).. it happend due to the fall and confusion at the period of cholas... we migrated to andra and expanded business after the fall.. clearly note even we adopted telugu all our cultural practises are tamil till now even we have gothra,blah,blah.. but naidus/other telugu caste not like this... it's true we mixed with telugus,aryans yes it's true.. but everyone forgot that our root is tamil and we are now in Tamilland and many speak tamil today (more than 70% today of mumudi chetty).. many cant b explained here.. and don't try to mix naidu with chetty title with 24 manaiyars... DIFFERNT

      Delete
  7. இந்த தகவல்கள் தவறானது 24மனையா ர் ஆந்திர பகுதிகளிலிருந்து வரவில்லை. இவர்கள் சுத்த தமிழர்களே நாயக்க படையெடுப்பில் பல சாதிகள் இங்கே தெலுங்காக மாறியது அதில் இந்த சாத்து வணிகரான 24 மனையாரும் அடக்கம்.

    ReplyDelete
    Replies
    1. இதுவே சரியான கருதுகோள்.
      சாத்து வணிகர்கள் அரசியல் மற்றும் மொழி எல்லைகள் கடந்து, சோழர்களின் கிழக்கிந்திய இந்தோனேசிய சுமத்திரா தீவு நாடுகள் வரை வணிகம் புரிந்து, இங்கெல்லாம் தமிழை பரவச்செய்தனர்.தமிழின் வேர்ச்சொற்கள் இன்றும் சுமத்ரா தீவு நாடுகளில் அவர்களின் மொழிகளில் உள்ளிருந்து புழங்கிவருகிறது.

      இந்த செட்டி குலமெனும் வணிகர்கள் வணிக காரணங்களால் பல தேசங்களுக்கு சென்று ஆண்டிக்கணக்கில் தங்குவர். ஆக ஆந்திரத்தில் இவர்கள் தங்கி வணிகம் செய்யும்போது அங்குள்ள பழந்தமிழின் வட்டார வழக்கான தமிழ்வேர் சொற்களை உடைய தெலுங்கு வழக்கை பயின்று வந்தனர். இத்தெலுங்கும் கூட தமிழின் ஒரு பிரதேச மாற்று வழக்கே.

      ஆக பின்னாளில் முகமதிய படையெடுப்புகளின் அச்சம் காரணமாகவும், அதன் சமகாலத்திய திராவிட அரசான விஜயநகர அரசின் ராஜீய
      வழக்கு மொழியான #தெலுகின் நடையை உபரி வழக்காக கைகொண்டு, #முகலாயர் அச்சத்தில் இருந்து தங்களை காத்துக்கொண்டனர்.

      ஆக
      24 மனை (தெலுங்கு) செட்டிகுலம்
      தமிழ்குடியே.

      இவர்களுக்கும் ஆந்திர-ஆந்திரர்களுக்கும் ஆந்திர மொழிக்கும் எவ்வித தொப்புளகொடி உறவும் இல்லை.

      வணிக சார்பு வழக்கான தெலுங்கு இவர்களின் வீடுகளிலும் வழங்கியதன் காரணம் எதுவென்றால்,
      முகலாய படைகள் தெலுகு மொழி பேசும் மக்களிடம் இன/மத ரீதியான அத்துமீறல்களை செய்வதில்லை என்பதும் அவர்தம் பெண்டிரை கைகொள்வதில்லை என்பதுமே. ஆகவே தெலுங்கு எனும் வழக்கை தத்தமது குடும்பங்களில் வழங்கி தங்களை முகமதியரிடம் காத்துக்கொண்டனர்.

      இன்றும் 24 மனையார் தங்களது குடும்ப உறவுகளுக்குள் மட்டுமே மணம்புரிந்து வந்து, இன்றுள்ள காலங்களில் தமிழ் மட்டுமே வழங்கும் ஏனைய செட்டிகுலத்துடன் மட்டுமே திருமண உறவுகளை பேணுவர்.

      தப்பித்தவறிக்கூட நாயுடு/நாயக்கர் போன்ற தெலுங்கு வழக்கினரிடம் திருமண உறவை வைப்பதில்லை.

      நாயக்கர் வகுப்பினரும் ஆந்திராவில் இருந்து வந்தவரல்ல.
      முகலாய அச்சத்தின் காரணமாக தெலுங்கு பற்றிப்பிடித்தவர்களாய் மட்டுமே இருக்க முடியும்.

      தெலுங்கு என்பது இவர்களுக்கு காப்புக்கு துணைநின்றாலும், அதனை மொழியாக கருதுவதில்லை இவர்கள்.

      தமிழர்குடி வேர்வழி குடிகளே இவர்கள்.

      Delete
    2. செட்டியார் என்பது ஒரு வணிகப்பட்டம் ஆகும். செட்டி என்பது இனம் கிடையாது. எட்டி என்பதன் மாற்று புணர்ச்சியே செட்டி என்பது. எட்டி(எட்ட உள்ள ஒரு பொருளை கிட்ட கொண்டு வந்து கொடுப்பவன்) இதுவே பின் நாளில் செட்டியார் என்றானது. 24மனை தெலுங்கு செட்டியார் இனம் தெலுங்கை தாய் மொழியாக கொண்ட இனம். போரையும் வணிகத்தையும் குலத் தொழிலாக கொண்ட இனம். இவர்கள் ஆதியில் பலிஜா இனத்தை சார்ந்தவர்கள்.இவர்களே செட்டி பலிஜாக்கள். செட்டி பலிஜாக்களே பலிஜாவின் முதல் கிளை என்று வரலாற்று ஆசிரியர்கள் கூறுகின்றனர். இவர்கள் பல பெயர்களில் வரலாற்றில் குறிப்படுகின்றனர். செஞ்சி நாயக்கர்கள் அனைவரும் செட்டிபலிஜாக்களே.மேலும் மாமன்னர் கிருஷ்ணதேவராயரும் பலிஜா இனத்தை சார்ந்தவரே.தமிழ்நாட்டைப் பொருத்தவரை 24 மனைதெலுங்கு செட்டிபலிஜாக்கள் பின்வருமாறு அழைக்கப்படுகிறார்கள் 24 மனை தெலுங்கு செட்டி, தெலுங்கு செட்டி, சாது செட்டி, தெலுங்கு பட்டி செட்டி, ஜனப்ப செட்டி, சலுப்பா செட்டி, மகாநட்டார் (கொடைகானல் மலை பகுதியில் நட்டார் என்றும் அழைக்கப்படுகிறது) , சாது குல தேசதிபதி தெலுங்கர் (1951 திருச்சி தஞ்சை சாதி பட்டியல்), யாக க்ஷத்ரிய செட்டியார் (1951 திருச்சி தஞ்சை சாதி பட்டியல்), தேசதிபதி தெலுங்கர்(1951 திருச்சி தஞ்சை சாதி பட்டியல்) என பல பெயர்களால் அறியப்படுகிறது. பண்ணைகாடு வனப்பகுதியில் உள்ளவர்கள் வாழைகாய்தெலுங்கர், என்றும், கிராமப்புறங்களில் உள்ள மதுரை, தேனி மற்றும் திண்டுக்கல் போன்ற பகுதிகளில் உள்ளவர்ளை உப்பு தெலுங்கர் என்றும் அழைக்கப்படுகிறார்கள்.

      Delete
    3. yes ! but naidus came from andra they are not tamils dont confuse 24 manai chetty with chetty balijja ! chetty balija is still present now they dont have 16 & 8 veedu kulams ans they belong to kapu/some other naidu caste even in andra there is chetty balija and the belong to kamma caste

      Delete
    4. நாயக்கர் வகுப்பினரும் ஆந்திராவில் இருந்து வந்தவரல்ல.
      முகலாய அச்சத்தின் காரணமாக தெலுங்கு பற்றிப்பிடித்தவர்களாய் மட்டுமே இருக்க முடியும்.
      ithu thavaru.... naidus were initially from andra and they are telugus..but 24 manai chetty are cheftains and royal statused people in chola court who crowned the cholas... but during vijayanagar rule 24 manai chetty were in nellore region and sorrounding and became adopted telugu as telugu became a major official lang of bussiness/trade at that time... but thank god we again came to motherland as immigrants with naidus and other telugu caste.. ppll think us as telugu bcz
      1) no one knows we are Tamil people in chola court
      2) migrated to andra (nellore region) for Trade purpouse bcz chola dynasity is collapsing and religon fight b/w shaiva,vaishnava which lead to death of chola king Athirajendra at 11th century.. all tamil people was in hurry to leav ethe country but they gone south side 24 manai mumudi chettys moved north and crossed the tamil border VADA VENKATAM and entered andra
      3) expanded bussiness and lived there for 500 years & mixed by telugu vadugas and aryans.. which made some of them looked like aryans....!
      4) Telugu became major Official language for Trade throuhout vijayanagara
      5) vaniga people are 85% telugus and kannadigas out of the famous is KOMUTI chetty.. Devanga chetty
      these castes are in andra bhoja and all telugu caste are there but no 24 manai
      6) we spoke telugu to the extent it became a proud mother tounge at that time
      7) came to tamilland as immigrants with other telugu memebers ..
      still more which can't be expalined here

      Delete
  8. 24manaiyar.in இந்த வலைதளத்தில் சென்று 24மனையார் பற்றி முழுமையாக அறியவும். இவர்கள் சுத்த தமிழர்களே

    ReplyDelete
    Replies
    1. my doubt clearly today...I can say proudly Sadhu chetty as tamil I felt many years our origin is tamil may practice telugu in between, for political somebody voluntarily added telugu in 24 manai chetty..our family do not speak telugu for last 5 generations..we believe Mahavishnu is our God he is also originally tamil..He is one of aaseevaga god...Dr.Rajinkanth Periyasamy, Thiruchirarpalli.

      Delete
    2. 24 manai Chetty is a Tamil caste bcz mumudiyar sub-caste people are the people who lived in cholanadu and crowned chola kings
      even the word "mummudiyaar" is given by mumudi cholan (Raja Raja I ) to us. mumudi chetty is TAMILANDA no telugu
      i know for past 6-7 generations we mumudiyaars speak only tamil no telugu

      Delete
  9. சாது செட்டி என்பவர்களின் வரலாறு என்ன?.
    பொட்டுகட்டி தாலி கட்டும் வழக்கம் நம் குலத்துக்கு உகந்ததா,இதன் வரலாறு நன்மை தீமை உள்ளது உள்ளபடி அறிய ஆவல்.
    நன்றி.

    ReplyDelete
    Replies
    1. செட்டியார் என்பது ஒரு வணிகப்பட்டம் ஆகும். செட்டி என்பது இனம் கிடையாது. எட்டி என்பதன் மாற்று புணர்ச்சியே செட்டி என்பது. எட்டி(எட்ட உள்ள ஒரு பொருளை கிட்ட கொண்டு வந்து கொடுப்பவன்) இதுவே பின் நாளில் செட்டியார் என்றானது. 24மனை தெலுங்கு செட்டியார் இனம் தெலுங்கை தாய் மொழியாக கொண்ட இனம். போரையும் வணிகத்தையும் குலத் தொழிலாக கொண்ட இனம். இவர்கள் ஆதியில் பலிஜா இனத்தை சார்ந்தவர்கள்.இவர்களே செட்டி பலிஜாக்கள். செட்டி பலிஜாக்களே பலிஜாவின் முதல் கிளை என்று வரலாற்று ஆசிரியர்கள் கூறுகின்றனர். இவர்கள் பல பெயர்களில் வரலாற்றில் குறிப்படுகின்றனர். செஞ்சி நாயக்கர்கள் அனைவரும் செட்டிபலிஜாக்களே.மேலும் மாமன்னர் கிருஷ்ணதேவராயரும் பலிஜா இனத்தை சார்ந்தவரே.தமிழ்நாட்டைப் பொருத்தவரை 24 மனைதெலுங்கு செட்டிபலிஜாக்கள் பின்வருமாறு அழைக்கப்படுகிறார்கள் 24 மனை தெலுங்கு செட்டி, தெலுங்கு செட்டி, சாது செட்டி, தெலுங்கு பட்டி செட்டி, ஜனப்ப செட்டி, சலுப்பா செட்டி, மகாநட்டார் (கொடைகானல் மலை பகுதியில் நட்டார் என்றும் அழைக்கப்படுகிறது) , சாது குல தேசதிபதி தெலுங்கர் (1951 திருச்சி தஞ்சை சாதி பட்டியல்), யாக க்ஷத்ரிய செட்டியார் (1951 திருச்சி தஞ்சை சாதி பட்டியல்), தேசதிபதி தெலுங்கர்(1951 திருச்சி தஞ்சை சாதி பட்டியல்) என பல பெயர்களால் அறியப்படுகிறது. பண்ணைகாடு வனப்பகுதியில் உள்ளவர்கள் வாழைகாய்தெலுங்கர், என்றும், கிராமப்புறங்களில் உள்ள மதுரை, தேனி மற்றும் திண்டுக்கல் போன்ற பகுதிகளில் உள்ளவர்ளை உப்பு தெலுங்கர் என்றும் அழைக்கப்படுகிறார்கள்.

      Delete
    2. Hypothetical comment! we are tamils.. 24 manai mumudiyaar chettiyar are relatives of cholas who crowned the cholas chetty balija is a caste present among naidus even today till 1920's many naidus used 'chetty' as their surname today it's not in practice among them.. don't confuse 24 manai chetty with chetty balija they are naidus!

      Delete
    3. senji nayaks may be called chetty balija but see their tradition they doesn't belong to any of our 16 & 8 veedu kulams they have naidu caste with chetty as title

      Delete
    4. Senji nayaks have tupakula intiperu of mummudiyar clan belonging to koneri group.. In North tamil nadu we are also known as 64 manai Telugu chettiars..

      Delete
    5. Middle cholas and Chalukya cholas are telugus who belong to Yagakshatriya 24 manai community.. Please dont change history

      Delete
  10. சாது செட்டி என்பவர்களின் வரலாறு என்ன?.
    பொட்டுகட்டி தாலி கட்டும் வழக்கம் நம் குலத்துக்கு உகந்ததா,இதன் வரலாறு நன்மை தீமை உள்ளது உள்ளபடி அறிய ஆவல்.
    நன்றி.

    ReplyDelete
    Replies
    1. செட்டியார் என்பது ஒரு வணிகப்பட்டம் ஆகும். செட்டி என்பது இனம் கிடையாது. எட்டி என்பதன் மாற்று புணர்ச்சியே செட்டி என்பது. எட்டி(எட்ட உள்ள ஒரு பொருளை கிட்ட கொண்டு வந்து கொடுப்பவன்) இதுவே பின் நாளில் செட்டியார் என்றானது. 24மனை தெலுங்கு செட்டியார் இனம் தெலுங்கை தாய் மொழியாக கொண்ட இனம். போரையும் வணிகத்தையும் குலத் தொழிலாக கொண்ட இனம். இவர்கள் ஆதியில் பலிஜா இனத்தை சார்ந்தவர்கள்.இவர்களே செட்டி பலிஜாக்கள். செட்டி பலிஜாக்களே பலிஜாவின் முதல் கிளை என்று வரலாற்று ஆசிரியர்கள் கூறுகின்றனர். இவர்கள் பல பெயர்களில் வரலாற்றில் குறிப்படுகின்றனர். செஞ்சி நாயக்கர்கள் அனைவரும் செட்டிபலிஜாக்களே.மேலும் மாமன்னர் கிருஷ்ணதேவராயரும் பலிஜா இனத்தை சார்ந்தவரே.தமிழ்நாட்டைப் பொருத்தவரை 24 மனைதெலுங்கு செட்டிபலிஜாக்கள் பின்வருமாறு அழைக்கப்படுகிறார்கள் 24 மனை தெலுங்கு செட்டி, தெலுங்கு செட்டி, சாது செட்டி, தெலுங்கு பட்டி செட்டி, ஜனப்ப செட்டி, சலுப்பா செட்டி, மகாநட்டார் (கொடைகானல் மலை பகுதியில் நட்டார் என்றும் அழைக்கப்படுகிறது) , சாது குல தேசதிபதி தெலுங்கர் (1951 திருச்சி தஞ்சை சாதி பட்டியல்), யாக க்ஷத்ரிய செட்டியார் (1951 திருச்சி தஞ்சை சாதி பட்டியல்), தேசதிபதி தெலுங்கர்(1951 திருச்சி தஞ்சை சாதி பட்டியல்) என பல பெயர்களால் அறியப்படுகிறது. பண்ணைகாடு வனப்பகுதியில் உள்ளவர்கள் வாழைகாய்தெலுங்கர், என்றும், கிராமப்புறங்களில் உள்ள மதுரை, தேனி மற்றும் திண்டுக்கல் போன்ற பகுதிகளில் உள்ளவர்ளை உப்பு தெலுங்கர் என்றும் அழைக்கப்படுகிறார்கள்.

      Delete
    2. Pottu Thali is the Thali of 24 manai or sadhu kula Kshatriyas community.. Kombu thali came after some period.. Please check Devathi amman temple history

      Delete
  11. ஆதாரமுள்ள உண்மை

    ReplyDelete
  12. Dear brother and sister i like to inform u we come from Andhra this confirmation u get in southindia caste and tribs.com we originally totta balijja pls kindly check

    ReplyDelete
  13. Originally we r mrf jute ,in Andhra prika is one communty pls watch youtub prika kula charithram if u no telugu

    ReplyDelete
  14. செட்டியார் என்பது ஒரு வணிகப்பட்டம் ஆகும். செட்டி என்பது இனம் கிடையாது. எட்டி என்பதன் மாற்று புணர்ச்சியே செட்டி என்பது. எட்டி(எட்ட உள்ள ஒரு பொருளை கிட்ட கொண்டு வந்து கொடுப்பவன்) இதுவே பின் நாளில் செட்டியார் என்றானது. 24மனை தெலுங்கு செட்டியார் இனம் தெலுங்கை தாய் மொழியாக கொண்ட இனம். போரையும் வணிகத்தையும் குலத் தொழிலாக கொண்ட இனம். இவர்கள் ஆதியில் பலிஜா இனத்தை சார்ந்தவர்கள்.இவர்களே செட்டி பலிஜாக்கள். செட்டி பலிஜாக்களே பலிஜாவின் முதல் கிளை என்று வரலாற்று ஆசிரியர்கள் கூறுகின்றனர். இவர்கள் பல பெயர்களில் வரலாற்றில் குறிப்படுகின்றனர். செஞ்சி நாயக்கர்கள் அனைவரும் செட்டிபலிஜாக்களே.மேலும் மாமன்னர் கிருஷ்ணதேவராயரும் பலிஜா இனத்தை சார்ந்தவரே.தமிழ்நாட்டைப் பொருத்தவரை 24 மனைதெலுங்கு செட்டிபலிஜாக்கள் பின்வருமாறு அழைக்கப்படுகிறார்கள் 24 மனை தெலுங்கு செட்டி, தெலுங்கு செட்டி, சாது செட்டி, தெலுங்கு பட்டி செட்டி, ஜனப்ப செட்டி, சலுப்பா செட்டி, மகாநட்டார் (கொடைகானல் மலை பகுதியில் நட்டார் என்றும் அழைக்கப்படுகிறது) , சாது குல தேசதிபதி தெலுங்கர் (1951 திருச்சி தஞ்சை சாதி பட்டியல்), யாக க்ஷத்ரிய செட்டியார் (1951 திருச்சி தஞ்சை சாதி பட்டியல்), தேசதிபதி தெலுங்கர்(1951 திருச்சி தஞ்சை சாதி பட்டியல்) என பல பெயர்களால் அறியப்படுகிறது. பண்ணைகாடு வனப்பகுதியில் உள்ளவர்கள் வாழைகாய்தெலுங்கர், என்றும், கிராமப்புறங்களில் உள்ள மதுரை, தேனி மற்றும் திண்டுக்கல் போன்ற பகுதிகளில் உள்ளவர்ளை உப்பு தெலுங்கர் என்றும் அழைக்கப்படுகிறார்கள்.

    ReplyDelete
    Replies
    1. Before 1952 our community was in Forward caste in the name of Balija chetty.. For Getting Bc status only 24 manai telugu chetty caste name was made official

      Delete